Labels

நண்பன் என்றோர் பெயர் உண்டு



நண்பர்கள் என்று 
பலர் உண்டு எனக்கு!
சகோதரன் என்பது
நீ ஒருவன்தானே!




பயணங்களில் ஏற்பட்ட
பழக்கம் நிலைத்திருப்பதில்லை
என்பார்கள்!
நாம் இருவரும் பழக்கப்பட்டதே
பயணங்களில் தானே!!

விருப்பங்கள் ஒத்துப்
போவதால்தான் நட்பென்றால்
ஒத்துப்போகாத பல உண்டு நம்மில்!
ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன்
ஒத்துப்போகதவை  உனக்கு பிடிக்கும் என்பதால்!
நீயும் அவ்வாறே!!

உன்னை விமர்சிக்க உரிமை
உள்ளவன் எனக்கருதி - பலமுறை
காயப்படுத்திருக்கலாம் என் சொற்கள்!
உன் நன்மையை தவிர வேறெதுவும்
யோசிப்பதில்லை அவை அத்தனையும்!!

என் வரலாறை நானே கூட
மறுமுறை யோசிப்பதில்லை!
நீ மட்டும் எப்படி
ஒவ்வொரு முறையும்
முதல் முறை ஆர்வம் காட்டுகிறாய்!?

இயற்கை பயணம்
அழகு தமிழ்
சமுதாயம் நகைச்சுவை

எத்துணை உண்டு நம் விருப்பட்டியலில்!

ஒருமுறை நீ பிரிந்து சென்ற வலி
பின்பு நம் இனக்கத்தின் அளவுகோளாயிற்று!
இனி ஒரு பிரிவு நம்மில் வருமென்றால்
நம்மில் ஒருவர் மரணித்திருப்போம் அந்நாளில்!!


இனி ஒரு பிறவி உன்டென்றால்
சகோதரனாக அல்ல!
நீ என் தாயாக பிறந்து விடு!!

No comments:

Post a Comment