Labels

என் முத்தங்களின் முகவரி நீ

 என் முத்தங்களால் 

உயிர்த்தெழுந்த

உன் மயிர்க்கால்களின் 

உரசல்களால் உண்டாகிறது 

என் உதடுகளின் ரேகை!


என் நாவில் தீண்டிய 

உன் உதடுகளில் 

தீ மூட்டி அனல் காய்கிறது

என் உயிர் காற்று!


முற்றுப் பெறாத 

என் முத்தங்களின் முகவரி நீ 



என் பிரபஞ்சத்தின் ஒற்றை நட்சத்திரம்



என் பிரபஞ்சத்தில் ஒற்றை நட்சத்திரம் நகர்ந்து சென்றது.

ஒற்றைத்தானே என்னவாகும் என்றிருந்தேன்!

பிரபஞ்சமே இருளில் மூழ்க தொடங்கியது.

பின் திரும்பி உன் ஒற்றை சிரிப்பை தந்து செல்..

என் பிரபஞ்சம் ஒளி வெள்ளத்தில் மூழ்கி போகட்டும்..

மயங்கிய மஞ்சம்!

மஞ்சத்திற்கு எழுகிறது ஒரு சந்தேகம் - தன் மடியில் மையம் கொண்டிருப்பது ஒரு மங்கையா அல்ல மலரா என்று! முடிவு கொள்கிறது மலர்தான் என்று மங்கை அழகில் மயங்கிய மஞ்சம்!!

ஒரே நாள் உன்னை நான்

 




முன்னுரை

என் மனதில் தோன்றிய ஒரு ஒற்றை வரி காதல் கவிதையை கதையாக்க முயன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

கார்த்திக் என்ற வனஉயிரினப் புகைப்படவியலாளர் தான் ஒரே ஒரு முறை கண்டு காதல் வயப்பட்ட வள்ளி என்னும் பெண்ணைத் தேடித் கொண்டிருக்க அவர் மேல் காதல் வயப்படுகிறாள் பவித்ரா என்னும் நடிகை. மற்றொரு புறம் ஜெயா என்னும் மாவட்ட ஆட்சியர் தன் பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறாள்.

கார்த்திக்கும் ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்? பவித்ராவின் காதல் வென்றதா? கார்த்திக் தான் தேடித் திரிந்த பெண்ணைக் கண்டுக்கொண்டானா? இப்படி பலவித கேள்விகளுக்கு பரபரப்பான விதத்தில் சுவாரஸ்யம் குறையாத பதில் தான் இந்த கதை.

உங்களுக்கு காடும், காதலும் பிடிக்குமென்றால் இந்த கதையும் பிடிக்கும்.

அது ஒரு தேவதை நினைவுகள்

 விதையாய் விழுந்தாய் என்னுள்!

வேர் ஊன்றினாய்! விருட்சமானாய்!

பிடுங்கி சென்றது உனையே என்றாலும் 

உனை சுமந்த என் வலி அறிவாயா?!

வெளிச்சங்கள் தந்த தேவதையே  இருளாக்கி சென்றாய்!

விடையொன்றும் அறியாத புதிராகி போனேன்!

எங்கெங்கு காணினும் உன் முகம் தெரிய 

தேடித்திரிகிறேன் உன் சிரிப்பில் தொலைந்த என்னை!

 

Popular Posts