Labels

அறிவு கெட்ட காதல்.



காதல் – ஒரு காவிய வார்த்தை, காலம் காலமாக நம் தமிழ் சமூகத்தினுடே வேர் கொண்டிருக்கும் ஒரு வகை படர்ந்து விரிந்த ஆலமரம். தமிழ் சினிமாவும், இலக்கியங்களும் காதலை தங்கள் குல தெய்வமாகவே கருதி பார்க்காத காதல், பேசாத காதலில் தொடங்கி
இன்டர்நெட் காதல் வரை பல பரிணாமங்களை நமக்கு காட்டியுள்ளன. காதலை பற்றிய கருத்துகள் பல உண்டு நம்மில். ஆனால் ஒருமித்து பார்த்தால் அவை அனைத்துமே பொய்யாக கூடும் இன்றைய யுவனும் யுவதிகளும் செய்யும் காதலை பார்க்கும்போது. சாரி, காதல்களை பார்க்கும்போது. யார் இன்று ஒரு காதலோடு நிறைவு பெறுவது. எழுத்தாளர் இருவனுடைய ‘ஒரு காதல்’ சிறுகதை தொகுப்பில் அவர் ஒன்றை குறிப்பிட்டிருப்பார். ‘ ஒரு முறை தான் காதல் என்பது தமிழின கோட்பாடு, ஆனால் அந்த ஒன்று எது என்பதுதான் இன்றைய கேள்வி’ என்றிருப்பார். அது இன்றைய சமுகத்தில் உண்மையே.

காதல் இன்றைக்கு வியாபார பொருளாகி போயிருக்கிறது. நீயா நானா கோபிக்கு கூட ஒரு நல்ல கருத்தை சொல்லும் விவாதம் என்றால் அடுத்த 2 வாரங்களுக்கு காதல் சார்ந்த ஏதேனும்  ஒரு விவாதகளம் தேவைபடுகிறது. இன்டர்நெட் ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வாரம் whatsapp, facebook என எதுலையுமே தொடர்பு கொள்ளவில்லை என்றால், சாரி சகோ உங்கள் காதலி இந்நேரம் உங்களை மறந்திருக்கலாம். அப்படி ஆகி விட்டது இன்றைய சூழ்நிலை.

நாங்கெல்லாம் அப்படி கிடையாது, எங்கள் உண்மை காதலை எந்த பிரிவும் எதுவும் செய்யாது என்பவர்கள் மன்னிக்கவும். நீங்களும் இந்த உலகில்தான் உள்ளீர்கள், காதலை வெகுவாக மதிப்பவர்கள் என்று உங்களை நீங்களே சொல்லிக்கொண்டால் உங்களைவிட முட்டாள் உலகத்தில்லை. உங்களில் அனேகர் காதலை ஒரு அரசாங்க பணியை போல் செய்து வருகின்றனர். எனக்கு நன்கு பரிட்சியமுள்ள ஒரு தோழி சாரி சாரி whatsapp-இல் தடை செய்தபிறகு என்ன தோழி வேண்டியிருக்கிறது? தெரிந்த பெண் ஒருவர் ஒருவரை வெகு நாட்களாக ஒருவரையே காதலித்து வந்தார். இதற்கே அந்த பெண்ணுக்கு கோவில் கட்ட வேண்டும் என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. அதைப்பற்றி முடிவில் யோசிப்போம். அந்த பெண்ணுக்கு உலகமே அவரின் காதலரே. நாம் பேசி கொண்டிருந்தால் கூட காதலர் போன் செய்துவிட்டால் தன்னை மறந்து பின் நம்மையும் மறப்பார். அவருக்காக மணிக்கணக்கில் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார். இதனால் அவருக்கு ஒரு பேருந்து ஓட்டுனர் நண்பரானது தான் மிச்சம். இந்த பெண் அளவுக்கு அவரின் காதலர் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். அவர் இவரை கொஞ்சம் கூட மதிக்க மாட்டார். இவர் ஒருநாள் முழுவதும் காத்திருந்தாலும் அவர் பொறுமையாக தனக்கு தோன்றும்போது, தேவைப்படும் போதே இவரை சந்திப்பார். இப்படி ஒரு அடிமைத்தனம் தான் காதலா?! இந்த பெண்ணுக்கு அவரின் காதலரின் வீட்டு விலாசம் கூட தெரியாது. கேட்டால் நம்பிக்கை இல்லையா எனக்கூறி காதலர் மறுத்து விடுவதாக தெரிவித்தார். இப்படி ஒரு முட்டாள்தன காதலால் இவர்கள் அடைய போவதென்ன?
காதலை இன்றுள்ள இளைய தலைமுறை பார்க்கும் விதம் முற்றிலும் மாறிவிட்டது. ஒன்று அடிமையாக மாறி போகின்றனர், இல்லை காதலை கொச்சை படுத்தும் களவானி தனத்தை காதல் என்கிறனர். இந்த அறிவு கெட்ட காதல் இவர்களை மட்டும் பாதிப்பதில்லை இவர்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர் வட்டம் என ஒரு சமுதாயத்தையே பாதிக்கிறது. ஆனால் இவர்கள் அதைப்பற்றி எவ்வித கவலையும் கொள்ளபோவதில்லை.
காதலில் அடிமைத்தனம் கூடவே கூடாது. நாம் நம்முடைய இனையிடமே இயற்கையாக இயல்பாக இருக்க முடியாதென்றால் அப்படி ஒரு மானங்கெட்ட காதல் எதற்கு? என் நலத்துக்கு தானே என் காதலர் இப்படி செய்கிறார், இதை ஏன் தவறாக பார்க்க வேண்டும் என் வாக்குவாதம் செய்ய முற்படுகிறவர்கள் ஒன்றை யோசித்து பாருங்கள். இன்று எதை உங்களுடைய கெட்ட பழக்கம் எனக்கூறி உங்கள் காதலர் உங்களை மாற்ற முயற்சிக்கிறாரோ அந்த பழக்கங்களை பார்த்தே உங்களை காதலித்து இருப்பார். இதுவாவது பரவாயில்லை தன்மீது சந்தேகபடும் காதலரை தன் மேல் அதிக அன்பிருப்பதாக இவர்களாக நினைத்துகொள்வது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.
என்னடா இவன் காதலுக்கு இவ்வளவு எதிரானவனா என்றால் இல்லை, உங்கள் காதலில் நீங்கள் காட்டும் அடிமுட்டாள் தனமும் அடிமை தனமும் தான் உண்மை காதல் என நீங்கள் நினைத்திருந்தால் நான் காதலுக்கு எதிரானவனே!

காதல் என்பது நம் சுதந்திர உணர்வை, நம்முடைய இயல்பை எதற்க்காகவும் இழக்காமல் நம்மை வைத்திருக்க உதவுவதே. என்னிலும் இந்த பாழாய்போன காதல் பலமுறை தலைகாட்டியதுண்டு. ஆனால் எதிலும் என் சுயமரியாதையை நான் இழந்ததில்லை. ஆனால் எனக்கு முன் நின்று உண்மை காதலின் மகத்துவம் பேசின பலபேர் இன்று மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகின்றனர் வேறொரு நபரை மனம் செய்து கொண்டு.

2 comments:

 

Popular Posts